ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அடிலெய்டு் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

News image

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியைக் காண வந்த ரசிகர்கள் - படம் | AP

Updated On :6 டிசம்பர் 2024, 3:55 pm IST

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அடிலெய்டு் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் விளையாடி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

புதிய சாதனை

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடிலெய்டு டெஸ்ட் போட்டியைக் காண மைதானத்துக்கு முதல் நாளில் 36,225 பேர் வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம், அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக ரசிகர்கள் வருகை புரிந்துள்ளனர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, அடிலெய்டில் நடைபெற்ற போட்டியின் முதல் நாளில் 35,081 பேர் மைதானத்துக்கு வந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது. தற்போது, அந்த சாதனை உடைக்கப்பட்டுள்ளது.

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண 96,463 பேர் வருகை புரிந்தனர். பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியைக் காண வந்த இரண்டாவது அதிகபட்ச ரசிகர்கள் எண்ணிக்கை இதுவாகும்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ள பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி மைதானங்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.