இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: கான்வே விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெவான் கான்வே | மார்க் சாப்மேன்
டெவான் கான்வே | மார்க் சாப்மேன்
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இந்தத் தொடருக்கு க்ரோவ்- தோர்ப் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் மற்றும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் போன்று இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு க்ரோவ்- தோர்ப் என்று பெயரிப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணியில் அறிமுகமாகும் சாம் கரனின் சகோதரர்!

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணி மூன்று போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் வரும் 14-ஆம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து சொதப்பி வருகிறது. மேலும், 2 வது டெஸ்ட் போட்டியில் 323 ரன்கள் வித்தியாத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. மேலும், நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில், நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே இந்த வாரம் அவருக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால், ஹாமில்டனில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டைத் தவறவிடுவார் என்று நியூசிலாந்து அணி தெரிவித்துள்ளது.

விமர்சனத்துக்கு பதிலடியாக கம்மின்ஸின் கொண்டாட்டம்..! கில்கிறிஸ்ட் புகழாரம்!

4 இன்னிங்ஸ்களில் வெறும் 21 ரன்கள் எடுத்த கான்வேவுக்குப் பதிலாக, ஆல்-ரவுண்டர் மார்க் சாப்மேன் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், “இந்தச் சூழலில் விளையாட்டைவிட குடும்பம் முதன்மையானது. கான்வே மற்றும் அவரது மனைவி கிம் இருவரும் தங்கள் முதல் குழந்தையை வரவேற்பதில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

மார்க் சாப்மேன் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி 276 ரன்கள் எடுத்திருந்தார். எனவே அவர் எங்கள் அணியுடன் இணைவதற்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்” என்றார்.

சிராஜிக்கு மூளையே இல்லை..! முன்னாள் இந்திய வீரர் கடும் விமர்சனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com