
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரன் மற்றும் அவரது அண்ணன் பென் கரன் இருவரும் விளையாடி வருகின்றனர். அதே வரிசையில் சாம் கரனின் மற்றொரு அண்ணனான பென் கரனுக்கு ஜிம்பாப்வே அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பென் கரன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரன் சகோதரர்களில் தந்தை கெவின் கரனும் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார். 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 287 ரன்கள் குவித்துள்ளார். ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகவும் இருந்த அவர் 2012 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
டி20 போட்டிகள் டிசம்பர் 11, 13, 14 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளிலும், டெஸ்ட் போட்டிகள் பாக்ஸிங் டேவான 26 ஆம் தேதியும், புத்தாண்டான 1 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
டி20 அணி: சிக்கந்தர் ராஸா (கேப்டன்), ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ரியான் பர்ல், ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, டினோடெனே மபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, தஷிங்கா முசெகிவா, ப்ளெஸிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்ட் நகர்வா, நியூமன் நியாம்ஹுலி
ஒருநாள் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், பென் கரன், ஜாய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டினோடீன் மபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, தஷிங்கா முசெகிவா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் ன்ஹுர்யாவா, ரிச்சர்ட் நகர்வா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நியுச்சி, சிக்கந்தர் ராஸா, சீன் வில்லியம்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.