ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்குங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

நேரத்தை வீணாக்காமல் இந்திய அணி பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அறிவுரை கூறியுள்ளார்.

News image

படம் | AP

Updated On :8 டிசம்பர் 2024, 10:05 pm IST

நேரத்தை வீணாக்காமல் இந்திய அணி பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலுமே சரியாக செயல்படவில்லை. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், அடிலெய்டு டெஸ்ட்டில் மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளனர்.

ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்

அடிலெய்டு டெஸ்ட்டில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளில் நேரத்தை வீணாக்காமல், உடனடியாக மூன்றாவது போட்டிக்கான பயிற்சியை தொடங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மீதமுள்ள 3 போட்டிகளை 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இந்திய அணி பார்க்க வேண்டும். இந்த டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதை இந்திய அணி மறந்துவிட வேண்டும். அடுத்த இரண்டு நாள்கள் இந்திய அணி அவர்களது நேரத்தை ஹோட்டல் அறைகளில் வீணடிக்காமல் உடனடியாக பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை விரும்புகிறேன். அது மிகவும் முக்கியம்.

இந்திய அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளிலோ அல்லது வேறு எங்கும் செல்வதற்காகவோ இங்கு இல்லை. அவர்கள் இங்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்துள்ளனர். அவர்கள் நாள் முழுவதும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. காலையிலோ அல்லது மாலையிலோ பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆனால், அடுத்த இரண்டு நாள்களும் கண்டிப்பாக பயிற்சி மேற்கொள்ளுங்கள். டெஸ்ட் போட்டி 5 நாள்கள் நடைபெற்றால், வீரர்கள் கண்டிப்பாக முழுமையாக ஐந்து நாள்களும் விளையாடப் போகின்றனர். போட்டி சீக்கிரம் முடியும் பட்சத்தில் மீதமுள்ள நாள்களில் வீரர்கள் அடுத்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.