திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் (விடியோ)!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

News image

ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்)

Updated On :21 டிசம்பர் 2024, 12:46 pm

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி மிகவும் வலுவாக தொடங்கியது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பந்து போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியைத் தழுவியது. இரு அணிகளுக்கும் இடையிலான பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது.

விடியோ வெளியிட்ட பிசிசிஐ

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி (பாக்ஸிங் டே டெஸ்ட்) டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. கடைசி இரண்டு போட்டிகளும் மிகவும் முக்கியம் என்பதால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ள விடியோவை பிசிசிஐ அதன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த விடியோவுக்கு, கடின உழைப்புக்கு மாற்று வேறு இல்லை. ஆடுகளத்துக்கு வெளியே வீரர்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பு அவர்களுக்கு போட்டியின்போது, வெற்றியை பெற்றுத் தருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள் என தலைப்பிடப்பட்டுள்ளது.

அந்த விடியோவில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா மற்றும் யஷ் தயாள் ஆகியோர் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முன்னிலையில் தீவிர பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்வது தெரிகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.