
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்த தொடரில் விளையாடுவதும் சவாலானது: ஷுக்ரி கான்ராட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு தொடரில் விளையாடுவதும் மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் (நடுவில்) - படம் | AP
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு தொடரில் விளையாடுவதும் மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. அதன் பின், டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு தொடரில் விளையாடுவதும் மிகவும் சவாலானது என தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தவொரு தொடரில் விளையாடுவதும் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும். அதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அதனால், சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரசிகர்கள் முன்னிலையில் விளையாடவுள்ளதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார்.
கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென்னாப்பிரிக்க அணி, அதன் பின் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
South Africa head coach Shukri Conrad has stated that playing any series against Australia is extremely challenging.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






