
10 மடங்கு வலிமையாக திரும்பி வருவேன்: பிரசித் கிருஷ்ணா
காயம் காரணமாக அணியில் இடம்பெறாமலிருந்த காலம் குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பேசியுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ
காயம் காரணமாக அணியில் இடம்பெறாமலிருந்த காலம் குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பேசியுள்ளார்.
இந்திய அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும்.
டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குழுவில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் முக்கியப் பங்கு வகிக்கிறார். காயம் காரணமாக ஓய்விலிருந்த பிரசித் கிருஷ்ணா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
இந்த நிலையில், காயம் காரணமாக அணியில் இடம்பெறாமலிருந்த காலம் குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனக்கு காயம் ஏற்படும்போது நான் எப்போதும் கூறிக்கொள்வது என்னவென்றால், இப்போது உள்ளதைக் காட்டிலும் 10 மடங்கு மிகுந்த வலிமையுடன் திரும்பி வர வேண்டும் என்பதுதான். வீரர்களுக்கு அந்த மனநிலை இருப்பது மிகவும் முக்கியம். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு முறை விளையாடிய அனுபவம் எனக்கு இருக்கிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளேன். அந்தத் தொடர்களிலிருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவது என்பது முற்றிலும் வித்தியாசமான சவால். அந்த சவாலுக்கு இந்திய அணி தயாராக உள்ளது. வீரர்கள் அனைவரும் அடுத்து வரும் பெரிய டெஸ்ட் தொடர்களுக்கு தயாராக இருக்கிறார்கள். எதிர்வரும் டெஸ்ட் தொடர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற எவ்வளவு முக்கியம் என்பதும் தெரியும். அதனால், அந்தத் தொடர்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
Summary
Indian fast bowler Prasidh Krishna has spoken about the period he spent out of the team due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






