நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்; ரவீந்திர ஜடேஜா வலியுறுத்தல்!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும்.

News image

ரவீந்திர ஜடேஜா (கோப்புப் படம்)

Updated On :21 டிசம்பர் 2024, 3:15 pm IST

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலையில் உள்ளன.

டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பாக்ஸிங் டே போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெளிநாடுகளில் விளையாடும்போது, அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் விளையாடும்போது, அவர்கள் மிகவும் நன்றாக விளையாட வேண்டும். முன்வரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடத் தவறும்போது, பின்வரிசை ஆட்டக்காரர்களின் மீதான பொறுப்பும் அழுத்தமும் அதிகரிக்கிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டு ரன்கள் குவிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிய ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.