சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி தேடல்! அதிரடி காட்டும் நட்சத்திர வீரர்கள்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஸ்ரேயாஸ் | ருதுராஜ் | கிஷன் | சஞ்சு சாம்சன்
ஸ்ரேயாஸ் | ருதுராஜ் | கிஷன் | சஞ்சு சாம்சன்
Published on
Updated on
1 min read

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால், ஏற்கனவே இந்திய அணியில் விளையாடிவர்களும், இளம்வீரர்களும் அதிரடியாக விளையாடிவருகின்றன.

32-வது விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடரில் ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத், அகமதாபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் ஹரியாணா, தமிழ்நாடு, மும்பை உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

தங்கள் பிரிவில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய அணியில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர், இஷன் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் மகராஷ்டிர அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 77 பந்துகளில் 148* ரன்கள் விளாசினார். அதில் 16 பவுண்டரிகளும், 11 சிக்ஸர்களும் அடங்கும்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் புச்சி பாபு, ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, விஜய் ஹசாரே என அனைத்து தொடர்களிலும் சதம் விளாசினார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று தந்தவருமான ஸ்ரேயாஸ் அய்யர், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், நியூசிலாந்துக்கு எதிரான சதமும் விளாசியிருந்தார். அதன்பின்னர் அணியில் இருந்து கலட்டிவிட்டப்பட்டர். அதற்கடுத்ததாக ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி, ஐபிஎல், இரானி கோப்பைகளை வென்று அசத்தினார். விஜய் ஹசாரே தொடரில் கர்நாடகத்துக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் விளாசினார்.

வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் கேரளத்தின் விஜய் ஹசாரே டிராபி அணியில் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவாரா? என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணி அனைவருக்கும் முன்னதாக தங்கள் அணியை அறிவித்துள்ளது. இதனால், இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களும் அணியில் இடம்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com