நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கும் பும்ரா, ஜடேஜா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் பும்ரா, ஜடேஜா படைக்கவிருக்கும் சாதனை பற்றி...

News image

ANI

Updated On :25 டிசம்பர் 2024, 12:20 pm IST

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைக்க இந்திய பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ஜடேஜா காத்திருக்கிறார்கள்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி (நாளை) தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

பும்ரா 200

பாக்ஸிங் டே டெஸ்டில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால் 200 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டும் 12-வது இந்திய பந்துவீச்சாளர் ஆவார் பும்ரா.

இதுவரை 43 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 19.52 சராசரியுடன் 194 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த பந்துவீச்சு 27/6. அதிகபட்சமாக ஒரு போட்டியில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் பார்டர் - காவஸ்கர் தொடரில், மூன்று போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் பும்ரா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 போட்டிகளில் 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.

ஜடேஜா 600

இன்னும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய 5-வது இந்திய பந்துவீச்சாளர் ஆவார் ஜடேஜா.

இதுவரை 349 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 593 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 17 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஜடேஜாவின் சிறந்த பந்துவீச்சு 42/7.

இந்த தொடரில் ஒரு விக்கெட்கூட ஜடேஜா வீழ்த்தவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 முறை 5 விக்கெட்டுகளும், ஒரு முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.