கோமாளி கோலி..! ஆஸி. ஊடகங்கள் கடும் விமர்சனம்!

இந்திய வீரர் விராட் கோலியை ஆஸி. ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
விராட் கோலியை ஆஸி. ஊடகங்கள் கடும் விமர்சனம்
விராட் கோலியை ஆஸி. ஊடகங்கள் கடும் விமர்சனம்படங்கள்: ஏபி, எக்ஸ்.
Published on
Updated on
1 min read

இந்திய வீரர் விராட் கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்திய, ஆஸி. மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிச.26) தொடங்கியது. இதில் ஆஸி. 474 க்கு ஆல் அவுட்டானது. தற்போது, இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

நேற்று ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி தேவையின்றி மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோலிக்கு 20 % அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்து ஆஸி. ஊடகங்கள் இந்திய வீரர் விராட் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளன.

பிஜிடி தொடருக்கு முன்பாக கோலியை பாராட்டி எழுதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பும்ராவின் ஓவரில் ரேம்ப் ஷாட் அடித்து 16. 18 ரன்கள் என தொடர்ச்சியாக அடித்து அசத்தினார். ஒரேநாளில் சாம் கான்ஸ்டாஸ் நாயகனாக மாறினார்.

கோமாளி கோலி

விராட் கோலியை முன்னாள் இந்திய வீரர்களும் விமர்சனம் செய்தார்கள். ஆனால், தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் செய்திதாளில் ஒருபடி முன்னே சென்று ’கோமாளி கோலி’ என செய்தியை வெளியிட்டுள்ளது.

கோலிக்கு மட்டும் சிறப்பு சலுகை தருவது ஏன்?

சிட்னி ஹெரால்டில் இது குறைவான தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளது. ஒருவரை உடல் ரீதியாக இடிப்பது லெவல் 2 குற்றத்தில் சேர்க்கப்பட வேண்டியது. அதன்படி விராட் கோலி தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சென் கிரிக்கெட்டில், “ஐசிசி ஒழுங்காக வேலை செய்திருந்தால் ஆஸி. மண்ணில் இதுதான் விராட் கோலியின் கடைசி டெஸ்டாக இருந்திருக்கும். கோலிக்கு மட்டும் சிறப்பு சலுகை தருவது ஏன்?” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தாண்டு 9 போட்டிகளில் 376 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் கோலி. சராசரி 25.06ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com