கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 90 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

News image

படம் | AP

Updated On :27 டிசம்பர் 2024, 1:28 pm

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

90 ரன்கள் முன்னிலை

பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதன் இன்னிங்ஸில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 301 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அய்டன் மார்க்ரம் 89 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கார்பின் போஸ்ச் அதிகபட்சமாக 93 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும்.

பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஷத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அமர் ஜமால் 2 விக்கெட்டுகளையும், முகமது அப்பாஸ் மற்றும் சைம் ஆயுப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.