கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விராட் கோலியை முந்திய ஸ்டீவ் ஸ்மித்..! இந்த முறை அதிக கேட்ச்சுகளில்!

இந்திய வீரர் விராட் கோலியைவிட அதிக கேட்ச்சுகள் பிடித்தவராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.

News image

ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி - கோப்புப் படம்

Updated On :31 டிசம்பர் 2024, 12:47 pm

இந்திய வீரர் விராட் கோலியைவிட அதிக கேட்ச்சுகள் பிடித்தவராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் 3 கேட்ச்சுகள் பிடித்தன்மூலம் விராட் கோலியை முந்தியுள்ளார்.

பார்டர்- கவாஸ்கர் (பிஜிடி) தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

குறைவான போட்டிகளிலே ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் 192 கேட்ச்சுகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட்டில் ராகுல் டிராவிட் 210 கேட்ச்சுகளுடன் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஜிடி தொடரில் அதிக கேட்ச்சுகள்

1. ராகுல் திராவிட் - (60 இன்னிங்ஸ்) - 46

2. விவிஎஸ் லக்‌ஷ்மணன் - (54 இன்னிங்ஸ்) - 36

3. ரிக்கி பாண்டிங் - (57 இன்னிங்ஸ்) - 36

4. ஸ்டீவ் ஸ்மித் - (41 இன்னிங்ஸ்) - 34

5. விராட் கோலி - (54 இன்னிங்ஸ்) - 31

6. மைக்கேல் கிளார்க் - (43 இன்னிங்ஸ்) - 29

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.