2-வது டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மே.இ.தீவுகள்!
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் உணவு இடைவேளையின்போது, 3 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்துள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் உணவு இடைவேளையின்போது, 3 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 18) தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாம் நாளான இன்று (ஜூலை 19) அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிரைக் பிரத்வெயிட் மற்றும் மிக்கில் லூயிஸ் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், மிக்கில் லூயிஸ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். கிரைக் பிரத்வெயிட் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸி 11 ரன்கள் எடுத்து சோயப் பஷீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளையின்போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்துள்ளது. அலிக் அதனாஸ் 5 ரன்களுடனும், காவெம் ஹாட்ஜ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...