எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜோ ரூட், ஹாரி ப்ரூக் சதம்: மே.இ.தீவுகளுக்கு 385 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 385 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
ஜோ ரூட்- படம் | AP
Updated On :21 ஜூலை 2024, 3:05 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 385 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூலை 21) இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி 425 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களும், ஹாரி ப்ரூக் 109 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஷமர் ஜோசப், ஜேசன் ஹோல்டர் மற்றும் கெவின் சின்க்ளேர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு 385 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு 299 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.