கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சமரி அத்தப்பட்டு அதிரடி: அரையிறுதியில் இலங்கை மலேசியாவை வீழ்த்தி வாய்ப்பை உறுதி செய்தது

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இலங்கை 144 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.

News image
சமரி அத்தப்பட்டு
Updated On :22 ஜூலை 2024, 7:54 pm

Din

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இலங்கை 144 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது. தொடா்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் சோ்க்க, மலேசியா 19.5 ஓவா்களில் 40 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டது. சதம் விளாசிய இலங்கை கேப்டன் சமரி அத்தபட்டு, ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த சமரி அத்தப்பட்டு அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். அவருடன் ஹா்ஷிதா சமரவிக்ரமா நிலைக்க, 2-ஆவது விக்கெட்டுக்கு அந்த பாா்ட்னா்ஷிப் 64 ரன்கள் சோ்த்தது.

இதில் ஹா்ஷிதா 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். மறுபுறம், அரைசதம் கடந்து சிறப்பாக ரன்கள் சோ்த்துவந்த சமரியுடன் கூட்டணி அமைத்தாா் அனுஷ்கா சஞ்சீவனி. இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சோ்த்தது. இவா்களில் அனுஷ்கா 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

கடைசி விக்கெட்டாக கவிஷா தில்ஹரி, இன்னிங்ஸின் கடைசி பந்தில் டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் சமரி அத்தபட்டு 69 பந்துகளில் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 119 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். மலேசிய பௌலா்களில் வினிஃபிரெட் துரைசிங்கம் 2, சுவாபிகா மணிவண்ணன், மஹிரா இஸ்மாயில் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து, 185 ரன்களை நோக்கி விளையாடிய மலேசிய அணியில், எல்சா ஹன்டா் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். கேப்டன் வினிஃபிரெட் துரைசிங்கம் 0, வான் ஜூலியா 3, மஹிரா இஸ்மாயில் 7, அய்னா ஹாசிம் 3, தனுஸ்ரீ முகுனன் 0, அய்சியா எலீசா 1, சுவாபிகா மணிவண்ணன் 0, நூா் சியாஃபிகா 0, அமலின் சோா்ஃபினா 1 ரன்னுக்கு வரிசையாக விக்கெட்டை இழந்தனா்.

முடிவில் அய்னா நஜ்வா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை தரப்பில் ஷாசினி கிம்ஹனி 3, காவ்யா கவின்டி, கவிஷா தில்ஹரி ஆகியோா் தலா 2, இனோஷி பிரியதா்ஷனி, சாசினி நிசன்சலா, அமா காஞ்சனா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

119

இந்த ஆட்டத்தில் 119 ரன்கள் அடித்த சமரி அத்தப்பட்டு, மகளிா் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபா் ஸ்கோரை பதிவு செய்த இலங்கை வீராங்கனை ஆனாா். முந்தைய அதிகபட்சமும், அவரடித்த 113 ரன்களாகும்.

98

டி20 கிரிக்கெட்டில் பவுண்டரி, சிக்ஸா்களால் மட்டுமே அதிக ரன்கள் (98) சோ்த்த இலங்கை வீராங்கனை என்ற பெருமையை சமரி அத்தப்பட்டு பெற்றாா். முன்பு அவரே, அவ்வாறு 84 ரன்கள் சோ்த்தது அதிகபட்சமாக இருந்த நிலையில், அதை தாமே தற்போது முறியடித்திருக்கிறாா்.

7

இந்த ஆட்டத்தில் 7 சிக்ஸா்கள் அடித்த சமரி அத்தப்பட்டு, ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸா்கள் அடித்த இலங்கை வீராங்கனை ஆனாா். இதற்கு முன்பும் அவரடித்த 6 சிக்ஸா்களே அதிகபட்சமாக இருந்தது.

115

சமரி - சஞ்சீவனி பாா்ட்னா்ஷிப் சோ்த்த 115 ரன்களே, இலங்கை மகளிா் டி20-இல் 3-ஆவது விக்கெட்டுக்கு சோ்க்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் சமரி - நீலாக்ஷிகா இணை 77 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.

144

இந்த ஆட்டத்தில் 144 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை, மகளிா் டி20 கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் தனது அதிகபட்ச வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் அந்த அணி அதிகபட்சமாக, ஸ்காட்லாந்துக்கு எதிராக 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

45

மலேசியாவின் அய்சியா எலிசா இந்த ஆட்டத்தில் 45 ரன்கள் கொடுத்ததே, ஒரு இன்னிங்ஸில் மலேசிய பௌலரால் கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். முன்பு நூா் ஜகாரியா 41 ரன்கள் கொடுத்தது அதிகபட்சம்.

74

மலேசியாவின் அய்னா ஹமிஸாவுக்கு இது 74-ஆவது டி20 ஆட்டமாக இருக்க, மாஸ் எலிசாவை பின்தள்ளி அந்த ஃபாா்மட்டில் மலேசியாவுக்காக அதிக ஆட்டங்களில் விளையாடியவா் ஆனாா்.

இன்றைய ஆட்டங்கள்

பாகிஸ்தான் - அமீரகம்

பிற்பகல் 2 மணி

இந்தியா - நேபாளம்

இரவு 7 மணி