மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எம்.எஸ்.தோனி குறித்து மனம் திறந்த ரிக்கி பாண்டிங்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

News image

எம்.எஸ்.தோனி (கோப்புப் படம்) - படம் | ஐசிசி

Updated On :5 நவம்பர் 2024, 3:35 pm

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்பிருதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக, அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டன.

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. எம்.எஸ்.தோனியை சிஎஸ்கே தக்க வைத்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மீண்டும் ஒருமுறை தோனி கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி ரசிகர்களுக்கு தொற்றிக் கொண்டது.

எம்.எஸ்.தோனி குறித்து பாண்டிங்...

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி விளையாடுவது உறுதியாகியுள்ள நிலையில், ஐசிசி ரிவ்யூவில் ரிக்கி பாண்டிங், தோனி குறித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் - படம் | ஐசிசி

ஐசிசி ரிவ்யூவில் எம்.எஸ்.தோனி குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதாவது: இரண்டு சீசன்களுக்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் சீசன் எம்.எஸ்.தோனிக்கு மோசமானதாக அமைந்தது. ஆனால், கடந்த ஆண்டு அவர் அதிலிருந்து மீண்டு அதிரடியாக விளையாடினார். பழைய தோனி எப்படி விளையாடுவாரோ அந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த ஐபிஎல் சீசனும் அவருக்கு அவ்வாறே இருக்கப் போகிறது. அவர் முழு சீசனிலும் விளையாடாமலிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர் விளையாடும் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

அவர் எந்த அணியில் விளையாடினாலும், அணியின் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் இடம்பெறும் குழுவில் அணியின் ஆலோசகராக எப்போதும் இருப்பார். அவர் அணியில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் சென்னை அணியுடன் அவர் இருப்பது மிகவும் முக்கியம். அவரது தலைமைப் பண்பு மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிஎஸ்கேவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

ஐபிஎல் போட்டிகளில் எம்.எஸ்.தோனி இன்னிங்ஸின் கடைசி 20 பந்துகள் இருக்கையில் களமிறங்குகிறார். இருப்பினும், அணிக்கு அவரது பங்களிப்பை கொடுக்கத் தவறியதில்லை. அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரினை உயர்த்தவும், வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்கவும் அவர் உதவுகிறார். அவரால் ஆட்டத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.