ஐபிஎல் ஏலம் நவ.24, 25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெறும் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களது ரீடென்ஷன் (தக்கவைப்பு) வீரர்கள் குறித்து பட்டியலையும் வெளியிட்டார்கள். அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வீரர்களான ஷஷாங் சிங், பிரப்சிம்ரன் சிங் ஆகியோரை மட்டும் தக்கவைத்து மற்றவர்களை வெளியேற்றியது.
பிரப்சிம்ரன் சிங் 2019இல் இருந்து பஞ்சாப் அணியில் இருக்கிறார். 34 போட்டிகளில் 756 ரன்கள், 22.24 சராசரியுடன் 146.23 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார்.
ஷஷாங் சிங் 14 போட்டிகளில் 164.65 ஸ்டிரைக் ரேட்டுடன் 44.25 சாரசரியுடன் அற்புதமாக விளையாடியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கு சமீபத்தில் ரிக்கி பாண்டிங் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் சிஇஓ சதீஷ் மேனன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இருவரை மட்டும் தக்கவைத்தது ஏன்
அணியின் முக்கியமான வீரர்களுக்கான திட்டம் எங்களிடம் உள்ளது. விரைவில் அதிகமான ஆச்சரியங்களை பார்ப்பீர்கள். பஞ்சாப் அணிக்கென்று தனித்துவமான வீரர்களை உருவாக்குகிறோம். இந்தமுறை நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மிகப்பெரிய ஆட்டத்தை ஆடுவோமென நம்புகிறேன்.
இதையும் படிக்க: பாக். தொடர்: ஆஸி.யின் புதிய டி20 கேப்டன் நியமனம்!
கடந்த 6 வருடமாக பிரப்சிம்ரன் சிங் வளர்ச்சியை கவனித்து வருகிறோம். அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். கடந்த ஆண்டு சிறப்பான பல இன்னிங்ஸை விளையாடினார். பெரிய தொடர்களில் சிகரமாக அவர் இருப்பாரென நம்புகிறோம்.
பல பேட்டிங் ஆர்டரில் ஷஷாங் சிறப்பாக விளையாடுகிறார். கடந்த வருடம் அவரது மன உறுதியை சிறப்பாக வெளிப்படுத்தினார். அதே ஸ்டைலையும் ஆர்வத்தையும் அவர் தொடர்கிறார். அதனால்தான் அவரை அணியில் தக்கவைத்தோம். இந்த 2 வீரர்கள் எங்களுக்கு சிறப்பாக பொருந்தியுள்ளார்கள்.
ஐபிஎல் கோப்பையை வெல்வோம்
இந்த முக்கியமான ஏலத்தில் நாங்கள் அதிக பணத்தொகையுடன் செல்கிறோம். அந்த நேரத்தில் எது இருக்கிறதோ அதை தேர்ந்தெடுப்போம். எங்களது புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருப்பதால் இந்த ஏலம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
ரிக்கி பாண்டிங் கிரிக்கெட்டில் மிகக் கூர்மையானவர். எங்களது அணி சிறப்பான அணியாக வளர்வதை காண்பீர்கள். எங்களது இலக்கு கோப்பையை வெல்வதே, அதைவிடவும் வேறெதுவும் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம்: ஷஷாங் சிங்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


