மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சதம் விளாசிய பில் சால்ட்; டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பில் சால்ட்டின் அதிரடி சதத்தினால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
சதம் விளாசிய மகிழ்ச்சியில் பில் சால்ட்- படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :10 நவம்பர் 2024, 11:46 am

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பில் சால்ட்டின் அதிரடி சதத்தினால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது.

வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பார்படாஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரோமாரியோ ஷெப்பர்டு 35 ரன்களும், குடகேஷ் மோட்டி 33 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சாக்யூப் மஹ்முத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளையும், ஜேமி ஓவர்டான் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் வில் ஜாக்ஸ் களமிறங்கினர். வில் ஜாக்ஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், பில் சால்ட் உடன் ஜேக்கோப் பெத்தேல் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தது. அதிரடியாக விளையாடிய பில் சால்ட் சதம் விளாசியும், ஜேக்கோப் பெத்தல் அரைசதம் விளாசியும் அசத்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பில் சால் 54 பந்துகளில் 103 ரன்களுடனும் (9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்), ஜேக்கோப் பெத்தல் 36 பந்துகளில் 58 ரன்களுடனும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.