
பாகிஸ்தானில் அடுத்தாண்டு சாம்பியஸ் டிராபி நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அஃப்ரிடி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருநாள் தொடரை வென்றதற்கு உறுதுணையாக இருந்த ஷாகின் ஷா அஃப்ரிடி 12.62 சராசரியுடன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தற்போது மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் 2-வது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் 3-வது இடத்திலும் உள்ளனர்.
மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஹாரிஸ் ராஃப் 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருது வென்றதுடன் 14 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 4-வது இடத்திலும், பும்ரா 6-வது இடத்திலும், முகமது சிராஜ் 8-வது இடத்திலும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.