மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிஎஸ்கே-வில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா; பழைய அணியே உருவாகிறதா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரைட் டூ மேட்ச் தெரிவைப் பயன்படுத்தி ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்துள்ளது.

News image

ரச்சின் ரவீந்திரா - படம் | AP

Updated On :24 நவம்பர் 2024, 1:33 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரைட் டூ மேட்ச் தெரிவைப் பயன்படுத்தி ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.

இந்த மெகா ஏலத்தில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் டெவான் கான்வேவை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.4 கோடிக்கு ரைட் டூ மேட்ச் தெரிவு மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.

ரச்சின் ரவீந்திரா ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடி வரும் நிலையில் அவர் மீண்டும் அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தின் வாயிலாக அதன் பழைய அணியையே மீண்டும் உருவாக்கி வருவதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.