பாக். வன்முறை: பாதியில் நாடு திரும்பிய இலங்கை ஏ அணி!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.
பாக். வன்முறை: பாதியில் நாடு திரும்பிய இலங்கை ஏ அணி!
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வன்முறையால் இலங்கை ஏ கிரிக்கெட் அணி பாதியில் நாடு திரும்பியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரின் ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 6 போ் பலியாகினா்.

அதன்தொடர்ச்சியாக பாகிஸ்தானில் வன்முறை தீவிரம் அடைந்துவரும் நிலையில், பாகிஸ்தான் ஷாகீன்ஸ் மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இலங்கை ஏ அணி நாடு திரும்பியுள்ளது. இதை பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியமும் உறுதிபடுத்தியுள்ளது.

முதல் போட்டி கடந்த திங்கள்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் அந்தப் போட்டி பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. மற்ற இரு போட்டிகள் இன்று(நவ.27) மற்றும் வெள்ளிக்கிழமை(நவ.29) இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது.

பாகிஸ்தான் முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த அதிகளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மத்திய உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்னும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டவில்லை. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியும் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்துவருகிறது.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் உடனான எந்த இருதரப்பு போட்டிகளிலும் விளையாடவில்லை. ஆனால், உலகக்கோப்பை, ஆசியக்கோப்பைகளில் விளையாடியிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். அதற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, நவம்பர் 29 ஆம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்திய அரசு தற்போதைய நிலையில் உறுதியாக இருப்பதால், பாகிஸ்தானுக்கு வெளியே ஹபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி நடத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com