உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இன்னும் எத்தனை தொடர்கள் உள்ளன தெரியுமா?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக அணிகள் விளையாடவுள்ள தொடர்கள் குறித்து...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இன்னும் எத்தனை தொடர்கள் உள்ளன தெரியுமா?
படம் | AP
Published on
Updated on
2 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அணிகள் தங்களுக்குள் பல்வேறு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், இந்திய அணி 74.24 சதவிகித வெற்றிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் முதலிடத்தில் தன்னை மேலும் வலிமைப்படுத்திக் கொண்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அணிகள் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர்கள் விவரம் பின்வருமாறு,

இங்கிலாந்து - பாகிஸ்தான்

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - முல்தான், அக்டோபர் 7- 11

2-வது டெஸ்ட் - கராச்சி, அக்டோபர் 15-19

3-வது டெஸ்ட் - ராவல்பிண்டி, அக்டோபர் 24-28

இந்தியா - நியூசிலாந்து

நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - பெங்களூரு, அக்டோபர் 16-20

2-வது டெஸ்ட் - புணே, அக்டோபர் 24-28

3-வது டெஸ்ட் - மும்பை, நவம்பர் 1-5

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம்

தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - டாக்கா, அக்டோபர் 21-25

2-வது டெஸ்ட் - சட்டோகிராம், அக்டோபர் 29 - நவம்பர் 2

வங்கதேசம் - மேற்கிந்தியத் தீவுகள்

வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - நார்த் சவுண்ட், நவம்பர் 22-26

2-வது டெஸ்ட் - கிங்ஸ்டான், நவம்பர் 30 - டிசம்பர் 4

இந்தியா - ஆஸ்திரேலியா

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - பெர்த், நவம்பர் 22-26

2-வது டெஸ்ட் - அடிலைடு, டிசம்பர் 6-10

3-வது டெஸ்ட் - பிரிஸ்பேன், டிசம்பர் 14-18

4-வது டெஸ்ட் - மெல்போர்ன், டிசம்பர் 26-30

5-வது டெஸ்ட் - சிட்னி, ஜனவரி 3-7

இலங்கை - தென்னாப்பிரிக்கா

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - டர்பன், நவம்பர் 27 - டிசம்பர் 1

2-வது டெஸ்ட் - கெபெர்ஹா, டிசம்பர் 5-9

இங்கிலாந்து - நியூசிலாந்து

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - கிறிஸ்ட்சர்ச், நவம்பர் 28 - டிசம்பர் 2

2-வது டெஸ்ட் - வெலிங்டன், டிசம்பர் 6-10

3-வது டெஸ்ட் - ஹாமில்டன், டிசம்பர் 14-18

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - செஞ்சூரியன், டிசம்பர் 26-30

2-வது டெஸ்ட் - கேப்டவுன், ஜனவரி 3-7

மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான்

மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் - கராச்சி, ஜனவரி 16-20

2-வது டெஸ்ட் - முல்தான், ஜனவரி 24-28

ஆஸ்திரேலியா - இலங்கை

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நடத்தப்படும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com