வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 சுழற்பந்து வீச்சாளர்கள்
ஒரு ஆண்டுக்குப் பிறகு சுழற்பந்துவீச்சாளர் செனுரன் முத்துசாமி அணிக்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே, அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் கேசவ் மஹராஜ் மற்றும் டேன் பெய்ட் இருவருடன் வலுவான சுழல் கூட்டணியில் இணைந்துள்ளார் செனுரன் முத்துசாமி.
30 வயதான ஆல்-ரவுண்டர் செனுரன் முத்துசாமி கடைசியாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த அணியில் அனுபவமில்லாத வீரராக மேத்யூ ப்ரீட்ஸ்கே சேர்க்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கான அணியை தெம்பா பவுமா தலைமைத் தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான முதல் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி: தெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, ரியான் ஆர் ஸ்டப்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரினே.
பயிற்சியாளர் கருத்து
இதுகுறித்து தென்னாப்பிரிக்க டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறுகையில், “ வங்கதேசத்தில் டெஸ்ட் தொடர் என்பது கடிமான ஒன்றாக இருக்கும். அவர்களுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமானது. ஆனால், எங்களுக்கு பல சவால்கள் இருக்கின்றன. இதனால், எங்களது வெற்றிக்கு தேவையான ஒரு அணியைத் தேர்வு செய்துள்ளோம்.
எங்களிடம் மூன்று முன்னணியான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். செனுரன் போன்ற பேட்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளருக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவரால் என் நிரூபிக்கமுடியும் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!
முஸரபானி, ந்கரவா அசத்தல்! டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஜிம்பாப்வே!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



