
மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: அட்டவணையை வெளியிட்ட வங்கதேச கிரிக்கெட் வாரியம்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

வங்கதேச அணி வீரர்கள் (கோப்புப் படம்) - படம் | ஐசிசி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 8) வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 5 ஆம் தேதி சில்ஹட்டிலும் தொடங்குகிறது. இந்த பிரதான போட்டிகளுக்கு முன்பாக இரு அணிகளும் பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடவுள்ளன.
The Windies are coming to Bangladesh! ð§ð©ð
— Bangladesh Cricket (@BCBtigers) September 8, 2026
Get ready for an exciting Test series as the West Indies take on Bangladesh in the 2025â27 ICC World Test Championship. ð¥
3-Day Warm-up Match: 22â24 Oct | Bashundhara Sports Complex, Dhaka
1st Test: 28 Octâ1 Nov | Sher-e-Bangla⦠pic.twitter.com/sDfo8ytCAS
அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த வங்கதேச அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் 8-வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகும்.
வங்கதேசம் - மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் அட்டவணை
முதல் டெஸ்ட் - அக்டோபர் 28 - நவம்பர் 1, மிர்பூர்
இரண்டாவது டெஸ்ட் - நவம்பர் 5 - நவம்பர் 9, சில்ஹட்
Summary
The Bangladesh Cricket Board has announced the schedule for the Test series against the West Indies today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






