மகளிர் உலகக்கோப்பை: தெ.ஆ. ஜெர்சியில் அன்புக்குரியவர்களின் பெயர்கள்!

தென்னாப்பிரிக்கா மகளிரணி தங்கள் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஜெர்சிகளை உருவாக்கி உள்ளது.
தென்னாப்பிரிக்கா மகளிரணியினர்.
தென்னாப்பிரிக்கா மகளிரணியினர்.
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மகளிரணி தங்கள் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஜெர்சிகளை உருவாக்கி உள்ளது.

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க..ரஷீத் கான் திருமண விழா கோலாகலம்.. துப்பாக்கியுடன் வலம் வந்த பாதுகாவலர்கள்!

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க மகளிரணியின் ஜெர்சியில் தங்களுக்கு பிரியமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் 5 பேரின் பெயர்களை பிரத்யேகமாகப் பதித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அணியின் உள்ள ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மற்றும் தங்களுக்கு ஆதராவாக இருந்த 5 பேரின் பெயர்களை ஜெர்சியில் எம்பிராய்டரி செய்துகொள்ளலாம்.

இதையும் படிக்க..மோடியின் சக்கரவியூகத்தை ஹரியாணா மக்கள் உடைப்பார்கள்' - ராகுல் காந்தி

அந்தப் பெயர்கள் ஜெர்சியின் காலர் பகுதியில் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணியின் விக்கெட் கீப்பர் சினோலா தனது ஜெர்சியில் தனது தாய் மற்றும் ஆலோசகரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முயற்சி சிறப்பான யோசனையாக உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவற்றுடன் போட்டியின் பி குழுவில் தென்னாப்பிரிக்கா இடம் பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இன்று(அக்.4) துபையில் மேற்கிந்திய அணிகளுடன் தனது முதல் போட்டியில் விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்கா மகளிரணி: லாரா வோல்வார்ட் (கேப்டன்), அன்னேக் போஷ், டஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டெர்க்சன், மைக் டி ரிடர், அயன்டா ஹ்லுபி, சினாலோ ஜஃப்டா, மரிசான் கப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், நோன்குலுலேகோ ம்லாபா, ச்லோ ஸ்னிக் நாயுடு, துமி, ச்லோ ட்ரையான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com