ஆஷஸ் தொடருக்கான அட்டவணை வெளியீடு! 40 ஆண்டுகால வழக்கத்தை மாற்றிய ஆஸி!

ஆஷஸ் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் - இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் - இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
Published on
Updated on
2 min read

2025-2026 ஆஷஸ் தொடர் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் தொடங்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரில் ஒன்றாக கருதப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் போட்டித் தொடர் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க..: நாட்டைவிட குடும்பமே முக்கியம்: பாட் கம்மின்ஸ் அதிரடி!

ஆஷஸ் தொடரில் கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது போட்டி பெர்த் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 ஆண்டுகால வழக்கத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மாற்றி இருக்கிறது. பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா கடைசியாக 1986-ஆம் ஆண்டு தான் இங்கிலாந்துக்கு எதிராகத் தோற்றது.

இதையும் படிக்க..: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாக். 366 ரன்களுக்கு ஆல்-அவுட்!

அதன் பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு தோற்றது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியிலும் தோற்றதே இல்லை என்ற பெருமையை இந்திய அணி கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்தது. இந்தப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது ஆஸ்திரேலியா.

மேலும், 2024 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இந்தச் சூழலில் பிரிஸ்பேனில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் 40 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது பெர்த் கிரிக்கெட் மைதானத்துக்கு அந்த கௌரவத்தை வழங்கி இருக்கிறது.

இதையும் படிக்க..: நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 94 பேர் பலி

ஆஷஸ் தொடருக்கான அட்டவணை

அதன்படி 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி பெர்த்தில் முதலாவது டெஸ்ட் தொடங்கி 25 ஆம் தேதி வரை நடக்கிறது. அடுத்ததாக டிசம்பர் 4 முதல் 8 வரை பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் பகல் - இரவாக 2-வது டெஸ்ட் போட்டியும், டிசம்பர் 17 -21 வரை அடிலெய்டு மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.

கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்பெர்ன் மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி 30 வரை நான்காவது டெஸ்ட் போட்டியும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 2026-ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் 8 வரை நடைபெறவுள்ளது.

2023 ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரை சமன் செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி தற்போது ஆஷஸ் கோப்பை தன்வசம் வைத்துள்ளது. ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 3-1 என்ற கணக்கில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க..: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சில மணி நேரங்களில் சீர்செய்யப்பட்ட நடைபாதை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com