வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் டிராவிஸ் ஹெட்; காரணம் என்ன?

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டிராவிஸ் ஹெட் விளையாடப் போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

டிராவிஸ் ஹெட் (கோப்புப் படம்)

Updated On :20 அக்டோபர் 2024, 4:51 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டிராவிஸ் ஹெட் விளையாடப் போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 4 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

டிராவிஸ் ஹெட் இல்லை

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டிராவிஸ் ஹெட் விளையாடப் போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. அவர் இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மீண்டும் அணியுடன் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இருந்து டிராவிஸ் ஹெட்டுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, நடைபெறும் டி20 தொடரிலும் டிராவிஸ் ஹெட் அணியில் இடம்பெறமாட்டார். தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணிக்காக ஓய்வின்றி விளையாடி வரும் டிராவிஸ் ஹெட், அவருடைய குடும்பத்தினருடன் இந்த ஓய்வு நாள்களை செலவிடவுள்ளார். அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 365 நாள்களில் டிராவிஸ் ஹெட் 330 நாள்கள் ஆஸ்திரேலிய அணியுடன் அவரது நேரத்தை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.