முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும்; முன்னாள் இந்திய கேப்டன் நம்பிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கணித்துள்ளார்.

News image

பார்டர் - கவாஸ்கர் கோப்பையுடன் ரோஹித் சர்மா மற்றும் பாட் கம்மின்ஸ் - படம்: ஐசிசி

Updated On :1 செப்டம்பர் 2024, 8:02 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் கோப்பை

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியா தொடரை வெல்லும்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இந்த முறை மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணிகளான இரண்டு அணிகளும் தங்களுக்குள் மோதிக் கொள்ளவுள்ளன. 5 போட்டிகள் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என கணித்துள்ளேன்.

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமைய வேண்டும் என்ற பிரச்னை இருக்கிறது. அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்களிடத்திலும் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற பிரச்னை உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் மிகவும் முக்கியமானது என்றார்.

பார்டர் - கவாஸ்கர் கோப்பை 2024/25

5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 முதல் தொடங்கி ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பெர்த், அடிலைடு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

அடிலைடில் நடைபெறும் போட்டி பகலிரவு ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.