பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

News image
- படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :10 செப்டம்பர் 2024, 2:22 pm

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.

பிரைடான் கார்ஸ் மற்றும் ஜோர்டான் காக்ஸ் அறிமுக வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சாளர்களான ரிஹான் அகமது மற்றும் ஜாக் லீச் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரிஹான் அகமது, கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஸாக் கிராலி, பென் டக்கெட், ஜோஸ் ஹல், ஜாக் லீச், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் விவரம்

முதல் டெஸ்ட் - முல்தான் (அக்டோபர் 7 - அக்டோபர் 11)

2-வது டெஸ்ட் - கராச்சி (அக்டோபர் 15 - அக்டோபர் 19)

3-வது டெஸ்ட் - ராவல்பிண்டி (அக்டோபர் 24 - அக்டோபர் 28)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.