பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: இலங்கை அணியில் புதிய கேப்டனாக குசல் மெண்டிஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
குசல் மெண்டிஸ்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், மூன்றாவது போட்டி இன்று (அக். 13) மாலை நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், நவ. 9 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கேப்டனாக இருந்த தனஞ்சய டி சில்வா விலகிய நிலையில், 31 வயதான குஷல் மெண்டிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல் தொடராக இது அமைந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்த நிஷாங்கா, டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி விவரம்: குசல் மெண்டிஸ் (கேப்டன்), பதும் நிஸங்கா, பசிந்து சூரியபண்டார, தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், சோனல் தினுஷா, தனஞ்சய டி சில்வா, அஞ்சல பண்டார, கேஷர நுவந்தா, பிரபாத் ஜெயசூரியா, மிலன் ரத்நாயகா, லஹிரு குமாரா, அசித பெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா, இஷான் மலிங்கா.
ð±ð° SQUAD ANNOUNCEMENT | Sri Lanka Tour of Pakistan ðµð°
— Sri Lanka Cricket ð±ð° (@OfficialSLC) October 13, 2026
Here is your 15-member Sri Lanka Test Squad for the upcoming 2-match Test series against Pakistan! ð#PAKvSL pic.twitter.com/vEE90nI0rz
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

