ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆப்கன்-நியூசிலாந்து டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது!

ஆப்கன்-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 6:37 am

DIN

ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே மழைக் குறுக்கிட்டதால் டாஸ்கூட போடமுடியாத நிலை ஏற்பட்டது.

ஒருவேளை இன்று (செப். 12) மழை குறைந்தால் நாளை 98 ஓவர்களுடன் 4-வது நாள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழையின் தீவிரம் குறையாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் மைதானத்தை உலர வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் போதுமான உபகரணங்களை வழங்கியுள்ளது. மழையிலிருந்து மைதானத்தை காக்க தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இருந்து அதிகளவிலான மழை கவர்கள் கொண்டுவரப்பட்டன.

இதுவரையிலும் 7 ஆட்டங்கள் மட்டும் மழையால் 5 நாள்களும் பாதிக்கப்பட்டு இருகின்றன.

இந்த இரு நாடுகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல்முறையாகும். இந்த டெஸ்ட் போட்டி முடிவுகள் ஐஐசியின் டெஸ்ட் சாம்பியன்ஸிப்பில் எடுத்துக்கொள்ளப்படாது.

நியூசிலாந்து அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இலங்கைக்குச் செல்ல இருக்கிறது. அதன் பின்னர் இந்தியா வந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.