ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!

ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Ricky ponting

ரிக்கி பாண்டிங் - படம் | ஐசிசி

Published On :18 செப்டம்பர் 2024, 4:15 pm IST

ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் உலகக் கோப்பையை வென்ற கேப்டனுமான ரிக்கி பாண்டிங் 2025 முதல் 2028வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

168 டெஸ்டில் 13,378 ரன்கள், 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ரன்கள், 10 ஐபிஎல் போட்டிகளில் 91 ரன்களும் எடுத்துள்ளார். 2013 உடன் அனைத்து போட்டிகளிலும் ஓய்வுபெற்று பயிற்சியாளர், வர்ணனையாளர் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தில்லி அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார். கடந்த 8 சீசன்களில் பஞ்சாப் அணிக்கு இது 6ஆவது பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பிரிங் பேட், உலகக் கோப்பை, பாண்டிங்கின் பேட்டினை பதிவிட்டுள்ளார்கள்.

ரிக்கி பாண்டிங் பேட்டிங் விளையாடும்போது அவரது பேட்டில் ஸ்பிரிங் இருப்பதாக 1990களில் இந்தியாவில் வதந்திகள் கிளம்பின. அதனை நினைவுப்படுத்தும் விதமாக பஞ்சாப் அணி பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.