
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை, முதல்நாளான வியாழக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் சோ்த்தது.
தினேஷ் சண்டிமல் சதம் விளாசி ஸ்கோரை உயா்த்த, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், கமிண்டு மெண்டிஸ் அரைசதம் கடந்து விளையாடி வந்தார்கள்.
இரண்டாம் நாளான இன்று 131 ஓவர் முடிவில் 432/5 ரன்கள் எடுத்துள்ளது.
அதிவேக சதம்
இந்தப் போட்டியில் மேத்யூஸ் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்க கமிந்து மெண்டிஸ் சதம் அடித்து அசத்தலாக விளையாடி வருகிறார்.
8 போட்டிகளில் இது 5ஆவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த போட்டிகளில் அதி வேகமாக 5 சதங்களை நிறைவு செய்த முதல் இலங்கை வீரர், முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 22 இன்னிங்ஸில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாவட் ஆலம் 5 சதங்கள் அடித்திருந்தார். தற்போது, கமிந்து மெண்டிஸ் 12 இன்னிங்ஸில் இதை நிறைவு செய்துள்ளார்.
டான் பிராட்மேனை சமன்செய்த கமிந்து மெண்டிஸ்
உலகப் புகழ்பெற்ற டான் பிராட்மேனும் 13 இன்னிங்ஸில் 5 சதங்கள் அடித்திருந்தார். அவரது சாதனையையும் 25 வயதாகும் கமிந்து மெண்டிஸ் சமன் செய்துள்ளார்.
அறிமுகமானதிலிருந்து தொடர்ச்சியாக 8 அரைசதம் அடித்து நேற்று (செப்.27) புதிய உலக சாதனை படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கும் உலக கிரிக்கெட் அணிக்கும் நல்ல கிரிக்கெட்டர் உருவாகி வருவது மகிழ்ச்சியளிப்பதாக வர்ணனையாளர்கள் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.