ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய நவாஸ்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது குறித்து...
Pakistan's Shaheen Shah Afridi, center, celebrates with teammates after taking the wicket of West Indies'
பாகிஸ்தான் அணியினர்... படம்: ஏபி
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 178/6 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக சைம் அயூப் 57, ஃபகர் ஸமான் 28 ரன்களும் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 164/7 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில், ஜான்சன் சார்லஸ் மற்றும் ஜுவெல் ஆண்ரிவ் தலா 35 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகள், சைம் அயூப் 2 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக விளையாடினர்.

முதல் 3 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்த நவாஸ் தான் வீசிய நான்காவது ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

Saim Ayub
சைம் அயூப்படம்: ஐசிசி

பேட்டிங், பௌலிங் என அசத்திய சைம் அயூப் ஆட்டநாயகானாக தேர்வானார். 8-0 என ஆஸ்திரேலியாவிடம் தோற்ற மே.இ.தீ. அணிக்கு சோகம் தொடர்கிறது.

Summary

Pakistan won the first T20I against West Indies by 14 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com