

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்தார். அவர் 102 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மைக்கேல் பிரேஸ்வெல் 47 ரன்களும், டாம் பிளண்டல் 29 ரன்களும் எடுத்தனர். கேப்டன் டாம் லாதம் 24 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமர் ரோச், ஓஜா ஷீல்ட்ஸ் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜேடன் சீல்ஸ், ஜோஹன் லேன் மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.