ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து லெவனில் இணைந்த வில் ஜாக்ஸ்

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து லெவனில் இணைந்த வில் ஜாக்ஸ்
Updated on
1 min read

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் ஒரே மாற்றமாக, காயமடைந்த மார்க் வுட்டுக்கு பதிலாக ஸ்பின் ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசியாக 3 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வில் ஜாக்ஸ், அதன் பிறகு வெள்ளைப் பந்து தொடர்களிலேயே விளையாடி வந்தார்.

இந்நிலையில், பிரிஸ்பேனில் வியாழக்கிழமை தொடங்கும் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட்டில் அவர் களம் காண்கிறார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஜோஷ் டங், மேத்யூ பாட்ஸ் போன்ற பேஸர்கள் தயார்நிலையில் இருக்கும்போதும், சுழற்பந்துவீச்சாளர் வில் ஜாக்ûஸ இங்கிலாந்து இணைத்துக்கொண்டுள்ளது.

சுழற்பந்து வீச்சில் கடந்த இரு ஆண்டுகளாக ஷோயப் பஷீர் இங்கிலாந்து அணியின் பிரதான தேர்வாக இருந்த நிலையில், இந்த ஆஷஸ் தொடரில் அவர் தயார்நிலை வீரராக இருந்தும், அவருக்குப் பதிலாக ஜாக்ஸ் பிளேயிங் லெவனில் தேர்வாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவாஜா இல்லை: இதனிடையே, முதல் டெஸ்ட்டின்போது முதுகுப் பகுதியில் காயம் கண்ட ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர் உஸ்மான் கவாஜா, அதிலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால், பிரிஸ்பேன் டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதில் ஜாஷ் இங்லிஸ், பியூ வெப்ஸ்டர் ஆகியோரில் ஒருவர் அணியில் இணையவுள்ளனர்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹேரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com