

பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் புதிய வரலாறு படைத்துள்ளார்.
இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட்டில் இந்த சாதனையை லபுஷேன் முதல் வீரராக நிகழ்த்தியுள்ளார்.
இரவு பகலாக ஆடப்படும் டெஸ்ட் போட்டிக்கு பிங்க் நிற பந்து பயன்படுத்துவதால் அதனை பிங்க் பந்து டெஸ்ட் போட்டி என அழைக்கிறார்கள்.
இந்த வகைமையில் முதல்முறையாக 1000-க்கும் அதிகமான ரன்களை குவித்த வீராரக மார்னஸ் லபுஷேன் வரலாறு படைத்துள்ளார்.
60 டெஸ்ட் போட்டிகளில் 4,560 ரன்களை எடுத்துள்ளார். அதில் 1,00க்கும் அதிகமாக இரவு - பகல் டெஸ்ட்டில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது 25-ஆவது டெஸ்ட் அரைசதத்தை நிறைவுசெய்த லபுஷேன் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிங்க் பந்தில் அதிக ரன்கள் குவித்தவர்கள்
1023 - மார்னஸ் லபுஷேன் (16 இன்னிங்ஸ்)
827* - ஸ்டீவ் ஸ்மித் (25 இன்னிங்ஸ்)
753 - டேவிட் வார்னர் (17 இன்னிங்ஸ்)
752 - டிராவிஸ் ஹெட் (16 இன்னிங்ஸ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.