ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லுவதைவிட கடினம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் தெரிவித்திருப்பதைப் பற்றி...
வில் ஜாக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி.
வில் ஜாக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி.
Updated on
2 min read

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26: ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லுவதைவிட கடினம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.

இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் திடலில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 371 ரன்களில் ஆல்-அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களுடன் பரிதாபமான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 12 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லுவது எளிது; ஆனால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லுவது மிகவும் கடினம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “வேகமான பந்து வேகத்துடன் மேலெழும்பும் ஆடுகளங்களில் இதுபோன்ற அணுகுமுறையுடன் இங்கிலாந்து அணி வீரர்கள் விளையாடுவது தவறானது என்று நான் நினைக்கிறேன்.

அந்த சூழ்நிலையையே போட்டியை மேலும் மோசமாக்குகிறது. இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகாததால் நீங்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், குறைந்த பவுன்ஸில் இருந்து அதிக பவுன்ஸ் ஆகும் பந்துக்கு நீங்கள் கஷ்டப்படும் வாய்ப்பு அதிகம். பேட்டர்கள் தாங்கள் ஒரு பேட்டராகவும் தங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

களத்துக்கு வந்தவுடனேயே 5 வது அல்லது 6 வது கியரில் பந்தை பார்த்து சுழற்றக் கூடாது. சில நேரங்களில் டெஸ்ட் போட்டியைப் பார்ப்பது டி20 போட்டி பார்ப்பது போலவே இருக்கிறது.

ஆஸ்திரேலிய வீரர்கள் உடல் ரீதியிலும், மன ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும் வலிமையாகவர்களாக இருக்கின்றனர்.

ஸ்லெட்ஜிங் (எதிரணி வீரரை வசைபாடுவது) என்பது ஆஸ்திரேலியர்களின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அவர்கள் 150 ஆண்டுகால கிரிக்கெட்டில் அதனைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வெற்றிபெறுவது கடினம் என்றுதான் நினைக்கிறேன். அது இங்கிலாந்து அணிக்கு 20 ஆண்டுக்கு ஒரு முறைதான் நடக்கும் என்று நினைக்கிறேன்.

பேஸ்பால் என்பதை முதலிண்டு போட்டிகளில் பயிற்சி ஆட்டம் போல பயன்படுத்த வேண்டும். பெர்த் மற்றும் பிரிஸ்பேன் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. உண்மையான ஆட்டமே தற்போது அடிலெய்ட்டில்தான் துவங்கியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் வெற்றிபெறுவது ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லுவதைவிட கடினமாகிவிட்டது.

இதுவும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உங்களின் சவான் மூன்று அல்லது நான்கு ஒலிம்பிக் தொடரில் ஒரு முறை மட்டுமே தங்கப்பதக்கம் வெல்லுவதைப் போல இருக்கிறது.

இங்கிலாந்து அணியினர் ஆஸ்திரேலியாவைக் குறைத்து மதிப்பிட்டு இருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் தவறுகளில் இருந்து திருத்திக்கொள்வார் என்று நம்புகிறேன்” என்றார் மாண்டி பனேசர்.

வில் ஜாக்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி.
ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்ச்சை!
Summary

Winning Test series in Australia harder than getting Olympic gold: Former England player

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com