இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரை இந்திய அணி வென்ற போதிலும், சஞ்சு சாம்சனுக்கு இந்த டி20 தொடர் சிறப்பானதாக அமையவில்லை.
கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி சதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்துக்கு எதிராக பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன், வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்...
இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக ஒரே மாதியான ஷாட்டினை தேர்வு செய்து சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இப்படியே தொடர்ச்சியாக ஆட்டமிழந்தால், அவரது மனமே அவரை குழப்பும் விதமாக செயல்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட்டமிழந்தது போன்று தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தால், அவரது மனமே அவரை குழப்பும் விதமாக செயல்படும். பந்துவீச்சாளர் குறிப்பிட்ட விதத்தில் பந்துவீசுகிறார். அவர் வீசும் ஒரே மாதிரியான பந்தில் நான் தொடர்ந்து ஆட்டமிழக்கிறேன். நான் ஏன் அவ்வாறு ஆட்டமிழக்கிறேன்.
பந்துவீச்சாளர் நன்றாக பந்துவீசுகிறாரா அல்லது என்னுடைய பேட்டிங்கில் குறை உள்ளதா? இது போன்ற பந்துவீச்சுக்கு ஏற்றவாறு என்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? இது போன்ற பல கேள்விகள் எழும். ஒரு முறை இது போன்று பல கேள்விகள் உருவாகிவிட்டால், நாம் நன்றாக விளையாடுவதை அது கடினமாக்கிவிடும் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது, சஞ்சு சாம்சனுக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அடுத்த ஒரு மாதத்துக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் இல்லை!

ஜிம்பாப்வே டி20 தொடரிலிருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்; அணியில் 3 அறிமுக வீரர்கள்!

சூர்யவன்ஷிக்காக டி20 உலகக் கோப்பை ஹீரோ சாம்சனை நீக்குவதா? முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அறிமுகமாக காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி; அழுத்தத்தில் இருக்கிறாரா சஞ்சு சாம்சன்?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



