ஆஸி. ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவன் ஸ்மித்துடன் சரித் அசலங்கா...
ஸ்டீவன் ஸ்மித்துடன் சரித் அசலங்கா...
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

முதலில் ஒரேயொரு ஒருநாள் போட்டி தம்புல்லேவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு போட்டி கூடுதலாக சேர்க்கப்பட்டு இரண்டு போட்டிகளும் கொழும்புவின் பிரேமதசா மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி புதன்கிழமையும் இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க... கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!

இந்தத் தொடருக்கு சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்

சரித் அசலங்கா(கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்கா, நுவனிது பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வாண்டர்சே, லஹிரு குமாரா, அசித ஃபெர்னான்டோ, மொஹமத் சிராஸ் மற்றும் எஸான் மலிங்கா.

இதையும் படிக்க... உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com