டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை! ஐபிஎல்லில் பங்கேற்பாரா?

சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை! ஐபிஎல்லில் பங்கேற்பாரா? என்பது குறித்து...

News image
Updated On :12 பிப்ரவரி 2025, 7:31 pm IST

சஞ்சு சாம்சனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பரும் ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சனுக்கு கைவிரலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான 5 வது டி20 போட்டியின்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் வலது ஆள்காட்டி விரலில் பலமாகத் தாக்கியது. இதனால், வெளியேறிய சாம்சனுக்குப் பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சாம்சன் குணமடைய ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபிஎல்லில் பங்கேற்க சரியான நேரத்தில் அவர் உடல் தகுதி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 21 ஆம் தேதி தொடங்கும் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரின் காயம் இன்னும் 5 வாரங்களில் குணமடையுமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கேரள அணிக்காகவும் விளையாடிவரும் சஞ்சு சாம்சன் இந்தக் காயத்தால் ரஞ்சி தொடரின் காலிறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான போட்டியிலும் விளையாட முடியாமல் போனது.

மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மும்பையில் நடந்த சிறப்புப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுக்லா, செய்தியாளர்களிடம் பேசுகையில் ஐபிஎல் தேதியையும் வெளியிட்டார். இருப்பினும், சஞ்சு சாம்சனின் காயம் குறித்து பிசிசிஐ எந்தத் தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.