தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முத்தரப்பு ஒருநாள் தொடரை வெல்லுமா பாகிஸ்தான்? டாஸ் வென்று பேட்டிங்!

முத்தரப்பு ஒருநாள் தொடரை வெல்லுமா பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

News image

சாண்ட்னருடன் முகமது ரிஸ்வான்...

Updated On :14 பிப்ரவரி 2025, 8:59 am

DIN

முத்தரப்பு ஒருநாள் தொடரை வெல்லுமா பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடிவருகின்றன.

நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில், இந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன்ஸ் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி கராச்சியில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் அணி

ஃபகார் ஜமான், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, தையாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.

நியூசிலாந்து அணி

டெவன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், ஜேக்கப் டஃபி, வில் ஓ'ரூர்க்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.