மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ரூ.94 லட்சம் விஐபி டிக்கெட்டுகளை தியாகம் செய்த பிசிபி தலைவர்!

விஐபி டிக்கெட்டுகளைத் தியாகம் செய்த பிசிபி தலைவர் மோஷின் நக்வி..!

News image

மோஷின் நக்வி...

Updated On :18 பிப்ரவரி 2025, 2:26 pm IST

இந்தியா - பாகிஸ்தான் அணிள் மோதும் போட்டியின் விஐபி டிக்கெட்களை பிசிபி தலைவர் தியாகம் செய்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி தன்னுடைய விஐபி டிக்கெட்டை ரூ.94 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். மேலும், தனக்கான போட்டிகளை சாதாரண ஸ்டாண்டில் இருந்து பார்ப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோஷின் நக்விக்கு விஐபி ஸ்டாண்டில் 30 இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இந்த இருக்கைக்கான டிக்கெட்டுகளை 4 லட்சம் திர்ஹாம்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.94 லட்சம்) விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும், இந்தப் பணத்தை பிசிபியின் நிதியாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் கூறுகையில், “மோஷின் நக்வி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு விஐபி பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் அவர் சாதாரண இருக்கைகளில் ரசிகர்களுடன் இருந்து போட்டியை ரசிக்க விரும்புகிறார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் நடத்தும் மிகப்பெரிய ஐசிசி போட்டி என்பதால் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.