வரவிருக்கும் தொடர் திருவிழாக்கள் மற்றும் சமய நிகழ்வுகளை முன்னிட்டு, ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட சில தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
பாரம்பரிய சமய நிகழ்வுகளை சுமூகமாக நடத்துவதற்கும், இந்த விசேஷ நாள்களில் வருகை தரும் பக்தர்களின் கூட்டத்தை நிர்வகிப்பதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாத விஐபி பிரேக் தரிசனம் ரத்து
ஜூலை 14 - ஆழ்வார் திருமஞ்சனம், ஜூலை 17 -ஆனிவார ஆஸ்தானம், ஜூலை 19 - ஸ்ரீ ஆந்தவான் ஆஸ்ரம சுவாமிஜிக்கு 'பெரிய மரியாதை' அளிக்கும் நிகழ்வு, ஜூலை 29 - சதுர்மாஸ்ய சங்கல்பம் நடைபெறும். இதன் காரணமாக, இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும்.
ஆகஸ்ட் மாத விஐபி பிரேக் தரிசனம் ரத்து
ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 22 ஆம் தேதி பவித்ரோற்சவத்தின் தொடக்கமான அங்குரார்ப்பணம் மற்றும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி பவித்ரோற்சவத்தின் இரண்டாம் நாளான பவித்ர சமர்ப்பணம் நடைபெறும். இதன் காரணமாக, இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும்.
செப்டம்பர் மாத விஐபி பிரேக் தரிசனம் ரத்து
செப்டம்பர் 8 - ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் ஆழ்வார் திருமஞ்சனம், செப்டம்பர் 14 - அங்குரார்ப்பணம் நடைபெறும். இதன் காரணமாக இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும்.
செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 23 வரை வருடாந்திர ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் நடைபெறும். இதன் காரணமாக, விஐபி பிரேக் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படும்.
மேற்கண்ட நாள்களில் விஐபி பிரேக் தரிசனங்களுக்கான பரிந்துரைக் கடிதங்கள் தொடர்பான விதிமுறைகளையும் தேவஸ்தான நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, மேற்கூறிய நாள்களுக்கு முந்தைய நாள்களில், நெறிமுறைக்கு உள்பட்ட முக்கியப் பிரமுகர்களைத் தவிர மற்றவர்களின் விஐபி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
எனவே, பக்தர்கள் மலைக் கோயிலுக்கான தங்கள் புனிதப் பயணத்தைத் திட்டமிடும்போது மேற்குறிப்பிட்ட நாள்களை கருத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Summary
The Tirumala Tirupati Devasthanams on Thursday announced the cancellation of VIP Break Darshans at the Srivari Temple on several specific dates between July and September 30, 2026, in view of a series of upcoming festivals and religious events.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











