ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி; ஷிகர் தவான் கூறுவதென்ன?
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாததது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி நாளை மறுநாள் (பிப்ரவரி 20) தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம்!
ஷிகர் தவான் கூறுவதென்ன?
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதததை இந்திய அணி வீரர்கள் போட்டிகளின்போது உணர்வார்கள் என முன்னாள் வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ராவை மிஸ் செய்வார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. பும்ரா அணியில் இல்லாததை போட்டிகளின்போது, வீரர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். என்னை பொருத்தவரை, ஜஸ்பிரித் பும்ராதான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சில் அவரது துல்லியத்தன்மையை மற்றொரு வீரர் செயல்படுத்துவது மிகவும் கடினம். ஐசிசியின் முக்கியமான தொடர்களில் அவர் மிகவும் அமைதியாக செயல்படக் கூடியவர்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் பெயர் அச்சிட்ட ஜெர்ஸியில் இந்திய வீரர்கள்!
ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது உண்மையில் அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். அவர் சவால்களை ஏற்றுக்கொண்டு விளையாடுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாடிய விதத்தை நாம் பார்த்தோம். அவருக்கு கிடைத்துள்ள இந்த மிகப் பெரிய வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு அணியின் வெற்றிக்கு உதவுவார் என நம்புகிறேன் என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனான ஷிகர் தவான், அந்தத் தொடரில் 10 இன்னிங்ஸ்களில் 701 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.