
பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
ஷகித் அஃப்ரிடி கூறுவதென்ன?
நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: போட்டியை வென்று கொடுப்பவர்கள் என்று பார்த்தால், பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள். போட்டியை வென்று கொடுப்பவர் என்பவர் தனி நபராக சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தருபவர். தற்போது, பாகிஸ்தான் அணியில் அதுபோன்ற வீரர்கள் இல்லை.
இந்திய அணியின் நடுவரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். பாகிஸ்தான் அணியின் நடுவரிசை மற்றும் பின்வரிசை அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. நீண்ட காலமாக பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், வீரர்கள் சில போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடினர். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட அவர்கள் தவறுகிறார்கள். அதன் காரணமாகவே, இந்திய அணியைக் காட்டிலும் பாகிஸ்தான் வலிமை குறைவாக உள்ளது. வலிமையான இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணி வீரர்கள் குழுவாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.