இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் இயான் பிஷப் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா முழுவதும் உள்ள 14 நகர்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதான இளம்வீரர் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யவன்ஷி, 404 ரன்கள் குவித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக ஹைதாரபாத் அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் விளாசியிருந்தார்.
சூர்யவன்ஷி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் நிலையில், அவர் இந்திய அணியில் விளையாடத் தயாராகி விட்டதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயான் பிஷப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் அயர்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணியின் விரைவில் சூர்யவன்ஷி களமிறங்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இயான் பிஷப்பின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக இயான் பிஷப் பேசுகையில், “நான் என்னுடைய அணியில் மூன்று தொடக்க ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்திருக்கிறேன். தொடக்க ஆட்டக்காரர்கள் இடது - வலது காம்பினேஷனில் இருக்கும் வகையில் தேர்வு செய்துள்ளேன்.
ஷுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதனால் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இடது கை ஆட்டக்காரருக்காக இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷியைத் தேர்வு செய்துள்ளேன். அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறத் தயாராக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், நான் பிரப்சிம்ரன் சிங்கையும் தேர்ந்தெடுத்துள்ளேன். பிரியான்ஷ் ஆர்யாவும் இந்தப் பட்டியலில் இருக்கிறார். அவர் இந்த சீசனில் நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறார்.
நான் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதேபோல மற்றொரு வீரர் ரஜத் படிதார் மற்றும் அபாரமாக விளையாடி வரும் தேவ்தத் படிக்கல். விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் ஜிதேஷ் ஷர்மாவைவிட சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.
ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நிதிஷ் குமார் ரெட்டி ரன்களைக் குவித்து வருவதுடன், அவ்வப்போது ஓரளவிற்கு நன்றாகப் பந்துவீசி விக்கெட்டுகளையும் எடுக்கிறார்.
சுழற்பந்து வீச்சாளர்களில் க்ருணால் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹலும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். 36 வயதானாலும், சிறப்பாக பந்து வீசிவரும் பெங்களூர் வீரர் புவனேஷ்வர்குமாரும் நான் தேர்வு செய்துள்ள அணியில் இடம்பெற்றுள்ளார்” என்றார்.
Summary
Former West Indies pacer Ian Bishop believes teenage batting sensation Vaibhav Sooryavanshi is ready to make the jump to international cricket, backing the Rajasthan Royals youngster for an India T20I debut in the near future.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோனியால் உத்வேகம், 15 ஆண்டு வலி மிகுந்த காத்திருப்பு... மனம் திறந்த 33 வயதான அறிமுக வீரர்!

ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! கொந்தளித்த விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள்!

சராசரி 65, ஸ்டிரைக் ரேட் 214... மிடில் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தும் ரஜத் படிதார்!

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி..! இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகுவாரா?
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு



