மோதலும் காதலும்..! கான்ஸ்டாஸ் குடும்பத்தினரை சந்தித்த கோலி, பும்ரா!

இந்திய வீரர்கள் கோலி, பும்ரா சாம் கான்ஸ்டாஸ் குடும்பத்தினரை சந்தித்த புகைப்படங்கள் வைரல்.
மோதலும் காதலும்
மோதலும் காதலும்படங்கள்: 7எஸ் கிரிக்கெட், இன்ஸ்டா/ பில்லி கான்ஸ்டாஸ்.
Published on
Updated on
1 min read

இந்திய வீரர்கள் கோலி, பும்ரா ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் குடும்பத்தினரைச் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ் (19) பும்ரா ஓவரில் அசத்தலாக சிக்ஸர் அடித்து பிரபலமானார்.

இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி கான்ஸ்டாஸை மோதுவார். அதற்காக கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸி. ஊடகங்கள் விராட் கோலியை இதற்காக கடுமையாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

பும்ராவும் கான்ஸாட்ஸ் விக்கெட்டினை 2ஆவது இன்னிங்ஸில் எடுத்து அவரை கிண்டல் செய்யும் விதமாக கொண்டாடினார். பதிலுக்கு கான்ஸ்டாஸும் பும்ரா விக்கெட்டினை கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டி சிட்னியில் பிங்க் பந்து நிற தொப்பியுடன் ஆஸி களமிறங்கவுள்ளது.

இந்தப் போட்டி ஜன.3இல் தொடங்குகிறது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே பிங்க் டெஸ்டின் நோக்கமாகும். இதன்மூலம் பணம் வசூலிக்கப்பட்டு மார்பக புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டதுக்காக ஆஸி. பிரதமர் அல்பனேசி இந்திய வீரர்களை அழைத்திருந்தார்.

இந்த விழாவில் விராட் கோலியுடன் சாம் கான்ஸ்டாஸின் சகோதரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

ஜஸ்பிரீத் பும்ராவும் கான்ஸ்டாஸ் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துகொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.