உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!பொது நூலகத் துறை இயக்குநர் ஜெயந்தி பதவி நீக்கம்! ஷஜீவனா ஐஏஎஸ் நியமனம்!பெரியார் அறிவுலகம்: அதிகாரி, அரசியல்வாதி யாரும் தப்பிக்க முடியாது - ராஜ்மோகன்ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!சத்தீஸ்கரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசான் விராட் கோலி..! வாட்சன் புகழாரம்!

சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி கம்பேக் தருவாரென முன்னாள் ஆஸி. வீரர் வாட்சன் பேட்டியளித்துள்ளார்.

விராட் கோலி. - கோப்புப் படம்

Updated On :

சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி கம்பேக் தருவாரென முன்னாள் ஆஸி. வீரர் வாட்சன் பேட்டியளித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி சுமாரான ஃபார்மில் விளையாடி வருகிறார்.

8 இன்னிங்ஸிலும் ஒரே மாதிரியாக அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தில் ஆட்டமிழந்து விமர்சனதுக்கு உள்ளாகியுள்ளார்.

2-1 என ஆஸி. முன்னிலையில் உள்ளதால் கடைசி டெஸ்ட்டில் விராட் கோலி, ரோஹித் நீக்கப்படுவார்களென பலரும் கூறிவருகிறார்கள்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான தனது முதல் போட்டியாக பிப்.20 ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் வாட்சன் கூறியதாவது:

தற்போதைய மோசமான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதன் தாக்கம் இருக்குமென நான் நினைக்கவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசான்

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபையில் நடைபெறுவதால் முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலையாக இருக்கும். இது இருவருக்கும் பேட்டிங்கை மேலும் இலகுவாக்கும் என நினைக்கிறேன்.

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆசானாக விராட் கோலி இருக்கிறார். ஆமாம், அவர் எல்லா விதமான கிரிக்கெட்டிலும் மாஸ்டர்தான். ஆனால், குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 57க்கும் அதிகமாக 93 ஸ்டிரைக் ரேட்டுடன் நீண்ட காலமாக விளையாடியுள்ளார்.

நீண்ட நாள்கள் இப்படி ஆடுவது மிகவும் பெரிய விஷயம். அதை நாம் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியில் பார்ப்போம். 2023 உலகக் கோப்பையில் ரோஹித்தைப் பார்த்தோம். அவர் சிறப்பான நிலையில் இருக்கும்போது ஆட்டத்தை தனியாக கொண்டு செல்வார்.

ஒருநாள் கிரிக்கெட்டினை உயிர்ப்புடன் வைக்கும் சாம்பியன்ஸ் டிராபி

இந்தியா பாகிஸ்தான் செல்லாதது துரதிஷ்டமானது. ஐசிசி போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் என்றாலே மிக முக்கியமானதாக இருக்கும்.

எப்படியானாலும் டி20, டெஸ்ட் ஆதிக்கம் மிகுந்த காலங்களில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட்டினை உயிருடன் வைத்திருக்கிறது என்றார்.

விராட் கோலி 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,906 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 58.18 ஆக இருக்கிறது. இதில் 50 சதங்கள், 72 அரைசதங்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.